
ஜெய்ப்பூரில் குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 21 வயதுடைய மோகித் சர்மா என்பவர் கலந்து கொண்டார். போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தபோது எதிர் வீரரை தாக்குவதற்காக ஓடி வந்த மோகித் சர்மா திடீரென மயங்கி விழுந்து விட்டார். அதன் பிறகு அவரை உடனடியாக அங்கிருந்தவர்கள் மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர்.
ஆனால் மாரடைப்பின் காரணமாக ஏற்கனவே அவர் உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் கூறிவிட்டனர். மேலும் சமீப காலமாக இளம் வயதினர் மாரடைப்பால் உயிரிழக்கும் சம்பவங்கள் என்பது அதிகரித்து வரும் நிலையில் தற்போது குத்துச்சண்டை போட்டியின் போது வீரர் மாரடைப்பால் உயிரிழந்தது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
जयपुर के वूशु खिलाड़ी मोहित शर्मा (21 वर्ष) की चंडीगढ़ यूनिवर्सिटी में मौत हो गई। गेम्स के दौरान वो अचानक मेट पर गिर गए। pic.twitter.com/mLR4XBHZY4
— Sachin Gupta (@SachinGuptaUP) February 25, 2025