சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்வை சந்தித்து வந்த நிலையில் பின்னர் விலை குறைந்தது.  இன்று ஒரே நாளில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1,320 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 57,600 ரூபாய்க்கும், ஒரு கிராம் 165 ரூபாய் வரையில் குறைந்து 7,200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேப் போன்று 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலையும் குறைந்து ஒரு கிராம் 7,856 ரூபாய்க்கும், ஒரு சவரன் 62, 848 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலை கிராமுக்கு 3 ரூபாய் வரையில் குறைந்து ஒரு கிராம் 102 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 102000 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.