
தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் மக்களுக்கு வீடு வீடாக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இவ்வாறு விநியோகிக்கப்படும் குடிநீரின் தரத்தை மாதந்தோறும் ஆய்வு செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக சுகாதாரத்துறை ஆய்வாளர்களுக்கு, பொது சுகாதாரத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
அதில் மக்களுக்கு சுகாதாரமான குடிநீரை விநியோகிப்பதில் கவனம் தேவை என அறிவுறுத்தியுள்ளது. முன்னதாக, கடந்த 20 நாள்களில், கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்த 9 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.