ஐக்கிய அரபு அமீரகத்தில் தொழிலாளர்களுக்கு கட்டாய  மதிய இடைவேளை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய உத்தரவு ஜூன் 15ஆம் தேதி முதல் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் அமலில் இருக்கும். அதாவது வெயில் அதிகமாக இருப்பதால் மதியம் 12:30 மணி முதல் 3 மணி வரை தொழிலாளர்களை வேலை செய்ய அனுமதிக்க கூடாது என அரசு உத்தரவிட்டதோடு தொழிலாளர்களை கட்டாயப்படுத்தி வேலை வாங்கும் முதலாளிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர்களை காலை மற்றும் மாலை என இரு நேரங்களில் ஷிப்ட் படி வேலை வாங்கலாம் என அறிவித்துள்ள நிலையில், ஒருவேளை தொழிலாளர்கள் கூடுதலாக வேலை பார்த்தால் அவர்களுக்கு கூடுதல் சம்பளம் வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விதிகளை மீறுபவர்கள் மீது பொதுமக்கள் உடனடியாக புகார் தெரிவிக்கலாம் எனவும் அரசு அறிவித்துள்ளது.