
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு 920 ரூபாய் குறைந்தது. இதனால் 22 கேரட் தங்கம் ஒரு கிராம் 9,015 ரூபாய்க்கும், ஒரு சவரன் 72,120 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 4 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு 3000 ரூபாய் அதிகரித்த நிலையில் இன்று திடீரென சரிவை கண்டுள்ளது. வெள்ளி விலை ஒரு கிராம் 110 ரூபாயாகவும், ஒரு கிலோ 1,10,000 ரூபாயாகவும் உள்ளது.