
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே கன்னிகாபுரம் என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்கு ஆறுமுகம் மற்றும் முருகேசன் என்பவர்கள் வசித்து வருகிறார்கள். இதில் ஆறுமுகத்திற்கு பிரவீன் என்ற 10 வயது மகனும், முருகேசனுக்கு கிரிநாத் என்ற 10 வயது மகனும் இருந்துள்ளனர்.
சிறுவர்கள் இருவரும் ஒரு தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்த நிலையில் நேற்று மாலை சிறுவர்கள் இருவரும் பள்ளி முடிந்து வீட்டிற்கு திரும்பிய நிலையில் பின்னர் இயற்கை உபாதை கழிப்பதற்காக பகுதியில் உள்ள ஒரு குட்டைக்கு சென்றுள்ளனர்.
அவர்கள் இருவரும் குட்டையில் கால் கழுவ இறங்கிய போது தண்ணீரில் மூழ்கி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்த சிறுவர்களின் தந்தைகள் சகோதரர்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் காவல்துறையினர் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.