ராஜஸ்தான் மாநிலத்தில் வருகின்ற நவம்பர் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கு அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்றால் குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டுக்கு 10000 ரூபாய் தமனை முறையில் வழங்கப்படும் என்றும் 1.05 கோடி குடும்பங்களுக்கு 500 ரூபாய்க்கு சமையல் கேஸ் சிலிண்டர் வழங்கப்படும் எனவும் அந்த மாநில முதல்வர் அசோக் அலார்ட் வாக்குறுதி அளித்துள்ளார்.