சென்னை மாவட்டம் மாதவரம் பகுதியில் 27 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். கடந்த 7-ஆம் தேதி இந்த இளம்பெண் தனது வீட்டின் கதவை திறந்து வைத்துவிட்டு குடும்பத்தினருடன் தூங்கினார்.

அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் காமேஷ்(54) என்பவர் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்து இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். உடனே அந்த பெண் கத்தி கூச்சலிட்டதால் குடும்பத்தினர் கண் விழித்து அவரை பிடிக்க முயன்றனர். அதற்குள் காமேஷ் அங்கிருந்து தப்பி சென்றார்.

இதுகுறித்து பாதிக்கபட்ட இளம்பெண் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த காமேஷை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.