
கோயம்புத்தூர் காந்திபுரம் நகர் பேருந்து நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும் முக்கிய பேருந்து நிலையம். இந்த பேருந்து நிலையத்திலிருந்து பல்வேறு மாவட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தனியார் பேருந்து ஒன்று பேருந்து நிலையத்திற்குள் வந்த நிலையில், அதை இயக்கி வந்த ஓட்டுநர் குடிபோதையில் பேருந்தை தவறுதலாக பின்னோக்கி இயக்கியுள்ளார். இதில் பேருந்துக்காக காத்திருந்த பயணிகளில் இருவர் பேருந்துக்கு அடியில் சிக்கி ஒருவர் படுகாயம் அடைந்தார்.
மற்றொருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அங்கிருந்த சக பேருந்து ஊழியர்கள் விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநரை கீழே இறங்கச் சொல்லும்போது அவர் குடிபோதையில் இருந்தது தெரியவர அவரை சரமாரியாக தாக்கி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வரைந்த காவல்துறையினர் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.