
திருச்சி மாவட்டம் ஆவாரம்பட்டி பகுதியில் வில்லியம் வேளாங்கண்ணி (30)-அற்புத மேரி (27) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் வேளாங்கண்ணி கட்டிட தொழிலாளியாக இருக்கும் நிலையில் இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள். இதில் வேளாங்கண்ணிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் தினசரி மது குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதேபோன்று நேற்று காலை வழக்கம் போல் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் அற்புதமேரி கோபித்துக் கொண்டு தன் தாய் வீட்டுக்கு சென்ற நிலையில் மாலையில் வீட்டிற்கு திரும்பினார்.
அப்போது குடிபோதையில் வேளாங்கண்ணி வீட்டில் படுத்திருந்தார். இதை பார்த்து கோபம் அடைந்த அற்புதமேரி ஆத்திரத்தில் குழவிக் கல்லை எடுத்து தன் கணவரின் தலையில் போட்டார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த வேளாங்கண்ணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த தகவலின் பேரில் மணப்பாறை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று வேளாங்கண்ணியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பிறகு அற்புத மேரியை அவர்கள் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.