ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ஒரு பகுதியில் இளம்பெண் ஒருவர் காரில் வேகமாக வந்துள்ளார். கடந்த திங்கட்கிழமை இரவு அந்த பெண் மது போதையில் காரை ஓட்டி வந்த நிலையில் ஒரு இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதினார். இந்த விபத்தில் 14 வயது சிறுமி சம்பவ இடத்தில் உயிரிழந்த நிலையில் இருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தப் பெண் பொறுப்பற்ற முறையில் மது போதையில் வண்டியை ஓட்டிவிட்டு விபத்தை ஏற்படுத்தியதோடு பின்னர் தன்னை விட்டு விடும்படி அங்கிருந்தவர்களிடம் கெஞ்சினார்.

தான் செய்த தவறுக்காக உடனடியாக கீழே வந்து உயிருக்கு போராடியவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் அந்த பெண்ணுக்கு வரவில்லை. தன்னை விட்டு விடும்படி அவர் கெஞ்சினார். இது அங்கிருந்தவர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்த நிலையில் அந்த பெண்ணை இழுத்துச் சென்று காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதைத்தொடர்ந்து விபத்தை ஏற்படுத்திய சமஸ்கிருதி என்ற பெண்ணையும் அவருடன் இருந்த மற்றொரு பெண்ணையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

 

விபத்தில் உயிரிழந்த சிறுமியின் பெயர் அஷிமா. இந்த சிறுமியின் தந்தை இஸ்லாமுதீன் மற்றும் ஒரு ஆறு வயது சிறுவன் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு தற்போது பிரபல பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்த வீடியோவை அவர் instagram ஸ்டோரியில் பகிர்ந்து இந்த பொறுப்பற்ற நடத்தையை ஏற்றுக்கொள்ள முடியுமா என்று பதிவிட்டுள்ளார்.