தமிழக முழுவதும் அரசு ஒரு முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளது. அதாவது தற்போது மழை பெய்து வருவதால் மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரின் தரத்தை ‌ செய்து வினியோகிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னதாக சென்னையில் குடிநீரில் கழிவு நீர் கலக்கப்பட்டதாக புகார் எழுந்த நிலையில் 3 பேர் உயிரிழந்தனர்.

அந்த தண்ணீரை ஆய்வகத்திற்கு அனுப்பிய போது அதில் பாக்டீரியாக்கள் இருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் ஆளும் கட்சிக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தான் மாவட்ட நிர்வாகங்கள் குடிநீரின் தரத்தை பரிசோதனை செய்து விநியோகிக்க  வேண்டும் எனவும் குளோரின் அளவை போதிய அளவில் கலக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் குடிநீரில் கழிவு நீர் கலப்பதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.