இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதள பயன்பாடு என்பது அதிகரித்துவிட்டது. இதனால் உலகின் எந்த மூலையில் என்ன சம்பவம் வித்தியாசமாக நடந்தாலும் உடனடியாக அதனை வீடியோவாக பதிவு செய்து வைரலாக்கி விடுகிறார்கள். இதில் சில நேரங்களில் வைரலாகும் வீடியோக்கள் ரசிக்க வைப்பதாகவும் ஆச்சரியப்பட வைப்பதாகவும் சில நேரங்களில் கோபத்தை துண்டுவதாகவும் இருக்கும். அந்த வகையில் சமீபத்தில் பெங்களூருவில் ஒரு பெண் லேப்டாப் பார்த்தபடியே கார் ஓட்டி சென்ற வீடியோ வைரலானது. இந்த பெண்ணுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்த நிலையில் தற்போது பெங்களூர் சாலையில் எடுக்கப்பட்ட ஒரு வீடியோ சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.

அதாவது இரு பெண்கள் ஸ்கூட்டியில் ஹெல்மெட் போடாமல் சாலையில் செல்கிறார்கள். அதில் ஒரு பெண்ணின் தோள்பட்டையில் கிளி ஒன்று அமர்ந்துள்ளது. அந்த கிளியை அவர் தோள்பட்டையில் வைத்தவாறு சாலையில் பைக் ஒட்டி செல்கிறார். மேலும் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் பயனர்கள்  பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.