
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக தென் மாவட்டங்களுக்கு பயணத்தை எளிதாக்கும் வகையில் சென்னை கிளாம்பாக்கத்தில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் புறநகர் பேருந்து நிலையம் கட்டப்பட்டு வந்தது.
இந்த பேருந்து நிலையம் எப்போது பயன்பாட்டிற்கு வரும் என பொதுமக்கள் அனைவரும் காத்திருந்த நிலையில், பல கோடி செலவில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இந்த நிலையில் ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து தென் மாவட்ட மக்களுக்கான பேருந்துகள் புதிதாக திறக்கப்பட்டுள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து மட்டும் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.