தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் விஜய் நடிப்பில் வெளிவந்த கில்லி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் பிரகாஷ் ராஜ் நடிகை திரிஷாவை செல்லம் செல்லம் என்று அழைக்கும் வசனம் மிகவும் ஃபேமஸ். இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செல்லம் என்ற வசனம் தன்னுடையது என்றும் தன்னை பார்த்து தான் பிரகாஷ்ராஜ் கில்லி படத்தில் பேசினார் என்றும் ஒரு பொது மேடை நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.

இது பற்றி அவர் கூறியதாவது, முதன் முதலில் தமிழ் சினிமாவில் செல்லம் ஐயோ என்கிற வார்த்தையை சொன்னது நான்தான். நான் வடிவேலுவை செல்லம் என்று  தான் அழைப்பேன். அதாவது பாஞ்சாலங்குறிச்சியில் படம் இயக்கும்போது வடிவேலுவை பார்த்து நான் செல்லம் இங்கு வாடி போடி என்று கூறுவேன். அதாவது  வாடி போடி என்று எங்களுக்குள் பேசி கொள்வோம். அது அப்படியே பரவிட்டு .அது அப்படியே பரவும் போது அந்த வசனத்தை பிரகாஷ்ராஜ் நம்ம கில்லி படத்தில் எடுத்து வச்சுக்கிட்டாரு. செல்லம் அது நான் போட்டது தான் அந்த பிட்டு என் பிட்டு தான் என்று கூறினார். மேலும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by cinema anyday ◀ (@cinema_anyday)