இந்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தலின்படி இன்று கிரெடிட் கார்டில் புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. அதாவது கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்கள் அதனை வழங்கும் நிறுவனத்தை தாங்களே தேர்வு செய்து கொள்ளும் புதிய விதிமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி ஏற்கனவே கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களும் மீண்டும் புதுப்பித்துக் கொள்ளும் போது தாங்கள் விரும்பும் நிறுவனத்தை தேர்வு செய்து கொள்ளலாம். பொதுவாக நீங்கள் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு வாங்கும் போது அதற்கான நெட்வொர்க்கை தேர்வு செய்யும் உரிமை கிடையாது. ஆனால் தற்போது நீங்கள் எந்த நிறுவனத்தின் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அதே நிறுவனத்தின் கார்டு உங்களுக்கு கிடைக்கும் புதிய விதிமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

பொதுவாக வங்கிகள் Visa, Rupay, Mastercard போன்ற நிறுவனங்களுடன் தனிப்பட்ட ஒப்பந்தம் வைத்திருக்கும் நிலையில் நீங்கள் வங்கிகளில் கிரெடிட் கார்டு வேண்டி விண்ணப்பிக்கும் போது வங்கிகள் விரும்பும் நிறுவனத்தின் கார்டுகள் தான் உங்களுக்கு கிடைக்கும். ஆனால் தற்போது நீங்கள் எந்த நிறுவனத்தின் கார்டு வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதே நிறுவனத்தின் கார்டு கிடைக்கும். மேலும் ரிசர்வ் வங்கி கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு போன்றவைகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் எந்த நிறுவனத்தின் கார்டு வேண்டும் என்று விண்ணப்பிர்க்கிறார்களோ அதன்படி கொடுக்க வேண்டும் என உத்தரவிட்ட நிலையில் இந்த புதிய விதிமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.