
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ஜெயம் ரவி. இவர் சமீபத்தில் தன்னுடைய பெயரை ரவி மோகன் என்று மாற்றிக் கொண்டார். இவர் கிரித்திகா உதயநிதி இயக்கத்தில் காதலிக்க நேரமில்லை என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் நித்யா மேனன் ஹீரோயின் ஆக நடித்திருந்தார்.
இந்த திரைப்படம் கடந்த மாதம் 14 ஆம் தேதி ரிலீசான நிலையில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது காதலிக்க நேரமில்லை திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. அதன்படி 11ம் தேதி இந்த படம் netflix ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.