தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருந்த உதயநிதி தற்போது தமிழ்நாட்டின் துணை முதல்வராக இருக்கிறார். இவருடைய மனைவி கிருத்திகா. இவர் திரைப்பட இயக்குனராக இருக்கும் நிலையில் வணக்கம் சென்னை போன்ற படங்களை இயக்கியுள்ளார். தற்போது காதலிக்க நேரமில்லை என்ற படத்தை கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஜெயம் ரவி மற்றும் நித்யா மேனன் முக்கிய வேடத்தில் நடித்துள்ள நிலையில் படத்தின் பிரேக் அப் டா என்ற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்தப் படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ள நிலையில் வினய், யோகி பாபு மற்றும் லட்சுமி ராமகிருஷ்ணன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் இன்று வெளியாகும் என்று படகுல அறிவித்திருந்த நிலையில் தற்போது ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. மேலும் இந்த டைலர் வீடியோ ரசிகர்களை கவர்ந்து சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வரும் நிலையில் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது.