தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் திரிஷா. இவர் நடிப்பில் தமிழில் வெளிவந்த லியோ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அஜித்துடன் இணைந்து நடித்த விடாமுயற்சி திரைப்படம் வெளியாகி வசூல் வேட்டை புரிந்து வருகிறது. நடிகை திரிஷா மலையாளத்திலும தெலுங்கு சினிமாவில் நடிகர் சிரஞ்சீவியுடன் இணைந்து ஒரு படத்திலும நடிக்கிறார். 40 வயதை கடந்த போதிலும் திரையுலகில் முன்னணி நடிகையாக திரிஷா கொடிகட்டி பறக்கிறார்.

இந்நிலையில் நடிகை திரிஷாவின் எக்ஸ் பக்கத்தில் தற்போது கிரிப்டோ கரன்சி தொடர்பான விளம்பரம் வெளியாகி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது நடிகை திரிஷா கிரிப்டோ கரன்சியை உருவாக்கி உள்ளதாகவும் அதனை உடனடியாக வாங்குமாறும் விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் நடிகை திரிஷா உடனடியாக அதில் வந்த விளம்பரம் போலி எனவும் எக்ஸ் பக்கம் ஹேக் செய்யப்பட்டு விட்டதாகவும் அது சரி செய்யும் வரை எந்தவிதமான போஸ்டையும் வெளியிடப் போவதில்லை என்றும் பதிவிட்டுள்ளார்.