
கோயம்புத்தூர் மாவட்டம் ஆவாரம்பாளையம் பகுதியில் சேர்ந்தவர் நதியா. நேற்று முன்தினம் சமையல் அறையில் கேஸ் அடுப்பில் குக்கரில் அரிசி மற்றும் பாத்திரத்தில் வெந்நீர் வைத்துவிட்டு குப்பை கொட்டுவதற்காக வெளியே வந்துள்ளார். அந்த சமயம் அவரது நான்கு வயது மகன் ஷ்யாம் வீட்டில் கதவை உலுக்கட்டமாக தாழ்ப்பாள் போட்டார்.
குப்பையை கொட்டி விட்டு வீட்டிற்கு வந்த நதியா கதவு உள்பக்கமாக பூட்டி இருப்பதை கண்டு தனது மகனிடம் கதவை திறக்குமாறு கூறியுள்ளார். ஆனால் கதவை திறக்க முடியவில்லை. மேலும் அடுப்பில் குக்கர் மற்றும் பாத்திரத்தில் வெந்நீர் கொதித்துக் கொண்டிருந்ததால் நிதியா என்ன செய்வது என்று அறியாது தூய்மை பணியாளர்களிடம் சென்று விபரத்தை கூறினார்.
அவர்கள் வந்து கதவை உடைத்து குழந்தையை மீட்டெனர். சுமார் ஒரு மணி நேரம் இந்த போராட்டம் நீடித்தது. இதுகுறித்து தூய்மை பணியாளர்கள் கூறும்போது, எங்களிடம் வந்து நதியா விஷயத்தை கூறியதால் ஜன்னல் வழியாக கேஸ் அடுப்பை அணைக்க முயற்சி செய்தோம். ஆனால் அது முடியவில்லை.
குக்கர் 5 விசில் அடித்தால் வெடித்து விடுமோ என்ற அச்சத்தில் அடுப்பில் இருந்து கஷ்டப்பட்டு இறக்கி வைத்தோம். பின்னர் பாத்திரத்தில் இருந்த தண்ணீர் வற்றாமல் இருப்பதற்காக ஒரு டியூபில் மாட்டி ஜன்னல் வழியாக கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரை பாத்திரத்தில் விட்டு வந்தோம். இதற்கிடையே கதவை உடைத்து குழந்தையை மீட்டதாக கூறியுள்ளனர். குழந்தையை பத்திரமாக மீட்ட தூய்மை பணியாளர்களை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.