
கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் நடந்த ஒரு கார் விபத்து மிகவும் அதிர்ச்சிகரமானதாக இருக்கிறது. அதாவது மருத்துவர் ஒருவர் தன் குடும்பத்துடன் காரில் சென்று கொண்டிருந்த நிலையில் திடீரென அவருடைய கார் கட்டுப்பாட்டை இழந்து சுவரை இடித்துக் கொண்டு ஒரு கிணற்றுக்குள் பாய்ந்தது. சுமார் 15 அடி ஆழம் கொண்ட அந்த கிணற்றில் தண்ணீர் குறைவாக இருந்ததால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்ப்பிழைத்துக் கொண்டனர்.

அவர்கள் தண்ணீரில் விழுந்த நிலையில் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவர்களுக்கு உதவி செய்து உயிரை காப்பாற்றினார். மேலும் இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.