தமிழகத்தில் தற்போது தேங்காய் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ஒரு கிலோ 70 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது சபரிமலையில் தற்போது சீசனை முன்னிட்டு தேங்காயின் தேவை அதிகரித்துள்ளது. பல மாநிலங்களில் பருவமழை மற்றும் பருவமழை தவறியதால் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தில் இருந்து அதிகமான அளவுக்கு தேங்காய் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன் காரணமாகத்தான் தேங்காய் விலை அதிகரித்துள்ளது. மேலும் சென்னை மற்றும் கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஒரு கிலோ 40 ரூபாய் முதல் 70 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகிறது.