
இந்தியாவில் சாமானிய மக்கள் முதல் அரசு ஊழியர்கள் வரை அனைவரும் பயன் பெரும் விதமாக மத்திய அரசு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் மக்களை நலனுக்காக பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவது மட்டுமல்லாமல் வட்டி விகிதமும் அதிகமாக வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக தபால் நிலைய சேமிப்பு திட்டங்களில் மக்கள் அதிக அளவு முதலீடு செய்ய விரும்புகின்றனர்.
இந்த நிலையில் கிஷான் விகாஸ் பத்ரா என்பது அரசால் ஆதரிக்கப்படும் ஒரு சிறு சேமிப்பு சான்றிதழ் திட்டம் ஆகும். இந்த நிலையான மற்றும் விகித சிறுசேமிப்பு திட்டம் 115 மாதம் முதல் இரவு காலத்துடன் இந்திய அஞ்சல் அலுவலகத்தால் தொடங்கப்பட்டது. திட்ட காலம் முடிவடைந்த பிறகு முதலீடு செய்யப்பட்ட தொகை இரட்டிப்பாகும். கிஷான் விகாஸ் பத்ரா சான்றிதழ்கள் பொதுத்துறை வங்கிகள் மற்றும் இந்திய தபால் நிலையங்கள் வழியாக வாங்குவதற்கு கிடைக்கின்றன. இந்த திட்டம் ஏழு புள்ளி ஐந்து சதவீதம் வட்டி விகிதத்தை வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.