
காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 22 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை இந்தியா நடத்தியது. இதில் 100 தீவிரவாதிகள் கொல்லப்பட்ட நிலையில் இதற்கு பழி வாங்கும் விதமாக தற்போது பாகிஸ்தான் இந்தியாவின் எல்லைப் பகுதிகளில் தாக்குதல் நடத்தி வருகிறது.
அதன்படி இந்தியாவில் உள்ள 15 இடங்களில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதாக வெளியுறவுத்துறை செயலர் கூறிய நிலையில் இந்த தாக்குதல் சம்பவங்களை முறியடித்ததாகவும் கூறினார். இந்த தாக்குதலில் 16 இந்தியர்கள் உயிரிழந்த நிலையில் காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர் முகமது இக்பால் குறித்து தவறான செய்திகள் பரவி வருகிறது.
அதாவது இவர் பயங்கரவாதி என்றும் இவர் பயங்கரவாத அமைப்பிற்கு தொடர்புடையவர் என்றும் சமூக ஊடகங்களில் செய்திகள் பரவும் நிலையில் இதனை பூஞ்ச் மாவட்ட காவல்துறை மறுத்ததோடு இதுபோன்ற தவறான செய்திகளை பரப்ப கூடாது என்று எச்சரித்துள்ளது.
மேலும் இந்திய படைகளின் தாக்குதலால் அவர் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது பூஞ்ச் மாவட்ட போலீசார் விளக்கம் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.