ஜம்மு காஷ்மீரில் 3 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. அதன்படி செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்தல் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு காஷ்மீரில் நடக்கும் முதல் சட்டப்பேரவை தேர்தல் ஆகும். இங்கு மொத்தம் 90 சட்டமன்ற தொகுதிகள் இருக்கும் நிலையில் காங்கிரஸ் கட்சியும், தேசிய மாநாட்டு கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இதில் தேசிய மாநாட்டு கட்சி 51 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி 32 இடங்களிலும் போட்டியிட இருக்கிறது. இதேபோன்று பாஜக மற்றும் ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளும் போட்டியிட இருக்கிறது.

இந்நிலையில் காஷ்மீர் தேர்தல் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே பேசிய விஷயம் தற்போது தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஜம்மு காஷ்மீரில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் நாட்டின் பிற பகுதிகளிலும் காங்கிரஸ் தன் ஆட்சியை நிலைப்படுத்த முடியும் என்று கூறியுள்ளார். குறிப்பாக தங்களுடைய அரசியல் கொள்கைகளை அதிகரிக்க வேண்டும் என்று காங்கிரஸ் எண்ணுகிறது. அதாவது காஷ்மீர் தேர்தலில் வெற்றி பெற்றால் ஒட்டுமொத்த நாட்டையும் கைக்குள் கொண்டு வந்துவிடலாம் என்பது போல் கார்கே பேசியுள்ளார். அதன்பிறகு ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து உரிமையை மீட்டெடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 மற்றும் 35ஏ விதிகள் விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் போது மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டங்களை நீக்கவில்லை. அதோடு அங்கு தீவிரவாதத்தை ஒடுக்க தவறியதோடு பிரிவினைவாத சக்திகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த சட்டங்களையும் நீக்க தவறியது. இந்தியாவின் ஒரு பகுதி தான் காஷ்மீர் என்று நினைக்காமல் தங்கள் அதிகாரத்தை நிலை நிறுத்தும் பகுதியாக காஷ்மீரை நினைத்து தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். இந்த சட்டங்கள் கடந்த 2019 ஆம் ஆண்டு பிரதமர் மோடி ஆட்சியில் நீக்கப்பட்ட நிலையில் அது சர்ச்சைக்குரிய விஷயமாக பார்க்கப்பட்டது.

இந்த சட்டங்கள் காஷ்மீரின் தனித்துவத்தை பாதுகாப்பதாக காங்கிரஸ் கூறி வந்தாலும் அது பிரிவினைவாதத்தின் ஒரு பகுதியாகவே கருதப்பட்டது. இந்த சட்டங்கள் அங்கு தீவிரவாதத்தை ஆதரிக்க உதவும் என்பதால் தான் பிரதமர் மோடி தலைமையிலான அரசு அந்த சட்டங்களை ரத்து செய்தது. இந்த திட்டங்கள் காஷ்மீரின் தனித்துவத்தை உறுதி செய்யும் என காங்கிரஸ் கூறினாலும் தீவிரவாதத்தை ஆதரிக்கவும் அது உதவும் என்பதால் தான் அந்த சட்டங்கள் நீக்கப்பட்டது. ஆனால் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் அந்த சட்டங்கள் கொண்டுவரப்படலாம் என்று கூறப்படுகிறது.

ஏனெனில் தங்கள் அதிகாரத்தின் ஒரு பகுதியாகவே காங்கிரஸ் காஷ்மீரை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். காங்கிரஸ் கட்சி தேசிய பாதுகாப்பு விவகாரத்தில் சிறப்பாக செயல்படவில்லை என்பதே அரசியல் விமர்சகர்கள் மற்றும் நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது. காங்கிரஸ் ஆட்சியில் தான் ஜம்மு காஷ்மீர் தீவிரவாதிகள் மற்றும் பயங்கரவாதிகள்  எழுச்சி மற்றும் புகழிடமாக இருந்த நிலையில் பாஜக ஆட்சியில் தீவிரவாதிகளை ஒழிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. காஷ்மீரில் பிரிவினைவாத கொள்கைகளைக் கொண்ட தேசிய ஜனநாயக கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்ததும் பேசும் பொருளாக மாறியுள்ளது.

இங்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தின் போது தீவிரவாதங்கள் அதிகரித்தது. இதுபோக தற்போது கார்கே கருத்துக்கள் அரசியல் ஆதாயத்திற்காக தேசிய பாதுகாப்பை சமரசம் செய்வது போல் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள். மேலும் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடிக்க நாட்டின் பாதுகாப்புடன் விளையாடுவது போன்று இருக்கிறது. ஒருவேளை மீண்டும் அந்த சட்டங்கள் கொண்டுவரப்பட்டால் காஷ்மீரில் தீவிரவாதம் தலைதூக்க வாய்ப்பு உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள். மேலும் கார்கே காஷ்மீரில் வெற்றி பெற்றால் நாடு முழுவதும் காங்கிரஸ் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும் என்று கூறியது தொடர்பான வீடியோவும் தற்போது சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.