
ஜம்மு காஷ்மீரில் உள்ள மச்சேதி பகுதியில் இந்திய ராணுவத்தின் வாகனம் ஒன்று நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது. இந்த வாகனம் மலை பாங்கான பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகள் ராணுவ வாகனம் மீது திடீரென குண்டுகள் வீசியும் துப்பாக்கி சூடு நடத்தியும் தாக்குதல் நடத்தினர்.
இதற்கு இந்திய ராணுவத்தினரும் பதிலடி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் பரிதாபமாக இறந்த நிலையில் 6 வீரர்கள் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து அந்த இடத்திற்கு கூடுதல் ராணுவத்தினர் வந்தனர். இந்நிலையில் படுகாயம் அடைந்த ராணுவ வீரர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் தற்போது பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பயங்கரவாதிகள் இருக்கும் இடத்தில் ராணுவத்தினர் சோதனை நடத்தி வருகிறார்கள்.