டெல்டா மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பயிர் சேதங்களை பார்வையிட 2 அமைச்சர்கள் கொண்ட குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், 6ஆம் தேதி அமைச்சர்கள், அதிகாரிகள் குழுவை சந்தித்து பாதிப்பு விவரங்களை கேட்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்..

டெல்டா மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை பார்வையிட 2 அமைச்சர்கள் கொண்ட குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.. அதன்படி வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவரை டெல்டா மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்திருப்பதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இது மட்டுமல்லாமல் வேளாண் துறையை சார்ந்த செயலாளர், இயக்குனர் உள்ளிட்ட மூத்த துறை அதிகாரிகளையும் கள ஆய்வு மேற்கொள்ள இவர்களோடு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்..

வரும் திங்கட்கிழமை (6ஆம் தேதி) அன்று இந்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழுவை சந்தித்து சேத விவரங்களை அறிந்து மழையினால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு பயிர் காப்பீட்டுத் தொகை பெற்று தருவது குறித்தும், இழப்பீடு வழங்குவது குறித்தும் உரிய மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்..

கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களை பொறுத்தவரை தஞ்சாவூர், திருச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், அரியலூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இருக்கக்கூடிய பயிர் சேதங்களை கணக்கிட இருப்பதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.