நாமக்கல் மாவட்டம் வெள்ளக்கல் பாளையத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி காமாட்சி பேளுக்குறிச்சி காவல் நிலையத்தில் எஸ்எஸ்ஐ-யாக வேலை பார்த்து வந்துள்ளார். இவர்களுக்கு விஜய ரதீஷ் ஹாசினியா என்ற 2 பிள்ளைகள் உள்ளனர். காமாட்சி இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டார். பின்னர் நள்ளிரவு 2 மணிக்கு காவல் நிலையத்திற்கு வந்து ஓய்வறைக்கு தூங்க சென்றார்.

நேற்று காலை நீண்ட நேரமாகியும் காமாட்சி எழுந்து வராததால் சந்தேகமடைந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது மயங்கி கிடந்த காமாட்சியை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் காமாட்சி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்தது தெரியவந்தது. காமாட்சியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி டிஎஸ்பி விஜயகுமாரிடம் அவரது குடும்பத்தினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகுதான் அவர் இறந்ததற்கான காரணம் தெரியவரும். இந்த விவகாரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.