
டயருக்குள் காலை விட்டு மாட்டிக் கொண்ட யானை குட்டியை பதறி அடித்து காப்பாற்றிய தாய் யானை ஒன்றின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த உலகில் தாய் பாசத்திற்கு இணையாக எதுவும் கிடையாது. எந்த ஒரு சுயநலமும் கலப்படமும் இல்லாமல் கிடைக்கக்கூடிய விஷயம் என்றால் அது தாய் பாசம் மட்டும் தான். அதுவும் தன்னுடைய குழந்தைக்கு ஆபத்து வரும்போது தாய் தன் முழு பலத்தையும் கொடுத்து குழந்தையை காப்பாற்ற முயற்சிப்பது என்பது இயற்கையில் தாய்மைக்கே உரிய குணமாகும்.
தாய் பாசம் என்பது மனித இனத்திற்கு மட்டுமல்லாமல் பறவைகள் மற்றும் விலங்குகள் என அனைத்துக்கும் பொதுவானதாக உள்ளது. அதனை பறைசாற்றும் விதமாக டயருக்குள் காலை விட்டு மாட்டிக்கொண்ட யானை குட்டியை ஓடி வந்து காப்பாற்றிய தாய் யானையின் நெகிழ்ச்சியான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க