சென்னையில் உள்ள கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று பூண்டின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது இல்லத்தரசிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இங்கு தமிழகம் மட்டுமின்றி மத்திய பிரதேசம், ராஜஸ்தான், காசி, குஜராத் மற்றும் வேலி உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் போன்று விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. தினசரி 150 டன் அளவுக்கு விற்பனைக்காக கொண்டுவரப்படும் நிலையில் தற்போது மத்திய பிரதேசத்தில் இருந்து 25 டன் மட்டுமே விற்பனைக்காக வருகிறது. இதனால் வரத்து குறைவு காரணமாக விலை  உயர்ந்துள்ளது.

கடந்த சில தினங்களாகவே ஏறு முகத்தில் இருக்கும் பூண்டின் விலை இருக்கிறது. அந்த வகையில் தற்போது முதல் ரக பூண்டின் விலை ஒரு கிலோ மொத்த விற்பனையில் 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன் பிறகு வெளி மார்க்கெட்டில் ஒரு கிலோ 450 முதல் 550 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒருபுறம் பூண்டு விலை அதிகரிக்க மற்றொருபுறம் வெங்காயத்தின் விலையும் அதிகரிக்கிறது. இது இல்லத்தரசிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.