
தமிழ் சினிமாவில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளிவந்த சிலம்பாட்டம், நடிகர் விஷாலின் அயோக்கியா உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் சனா கான். இவர் ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் வெளியிட்ட மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவர் திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகிய நிலையில் குழந்தைகள் இருக்கிறது. இந்நிலையில் பிரபல நடிகை சனா கானின் தாயார் சயீதா உடல் நலக்குறைவினால் நேற்று காலமானார்.
அவரது உடல் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. மேலும் நீண்ட நாட்களாக உடல் நலகுறைவினால் பாதிக்கப்பட்டிருந்த அவர் திடீரென மரணமடைந்த நிலையில் அவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.