
சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் வரையில் சரிந்த நிலையில் இன்று விலை 600 ரூபாய் வரையில் குறைந்துள்ளது. இதன் காரணமாக 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 73240 ரூபாய்க்கும், ஒரு கிராம் 9155 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் குறைந்து ஒரு கிராம் 9987 ரூபாய்க்கும், ஒரு சவரன் 79896 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் 120 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 120000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.