
தென்னிந்திய சினிமா அளவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளம் என அனைத்து மொழி திரைப்படங்களிலும் முன்னணி நடிகையாக இருந்து வருகின்றார். கீர்த்தி சுரேஷ் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு ஃபேஷன் டிசைனிங் படித்துள்ளார். இதனை தொடர்ந்து சினிமாவிற்குள் வந்து தமிழில் விஜய் உடன் இரண்டு படங்களுக்கு மேல் நடித்துள்ளார். சினிமாவில் நுழைந்த சில வருடங்களிலேயே சைமா விருதுகள் மற்றும் பிலிம்பேர் விருதுகள் ஆகியவற்றை பெற்றுள்ளார்.
கடந்த வருடம் தனது நீண்ட நாள் காதலர் ஆண்டனி தட்டிலை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாகஇருந்து வரும் கீர்த்தி சுரேஷ் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது வழக்கம். அந்தவகையில் தற்போது காலையிலேயே யோகா செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவிற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.
View this post on Instagram