பெரம்பலூரில் இருந்து திருச்சி நோக்கி விபத்தில் சிக்கிய ஒரு கல்லூரி பேருந்தை மீட்டு விட்டு வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரி கூத்தூர் மேம்பாலத்தில் வந்த போது வெல்ல மூட்டைகள் ஏற்றி வந்த லாரி எதிர்பாராத விதமாக பேருந்தின் பின்பக்கம் மோதியது.

அதோடு பின்னால் வந்த மற்றொரு லாரியும் விபத்தில் சிக்கியது. இதனால் அடுத்தடுத்து மூன்று வாகனங்கள் ஒரே நேரத்தில் விபத்துக்குள்ளானது. இதன் காரணமாக சென்னை மற்றும் திருச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கிட்டத்தட்ட மூன்று கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றது.

இது குறித்து போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து கிட்டத்தட்ட ஐந்து மணி நேரத்திற்கு பிறகு விபத்தில் சிக்கிய வாகனங்களை ஒவ்வொன்றாக மீட்டனர். மேலும் இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.