
குஜராத் மாநிலம் சூரத்தில் 16 வயதான சிறுவன், தனது 13 வயது சகோதரியை பலாத்காரம் செய்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. TV சீரியல்களில் வரும் அந்தரங்க காட்சிகளை பார்த்து விட்டு, அந்த சிறுவன் தன் சகோதரியை பலாத்காரம் செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இது, குடும்பத்தில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறுமி வயிற்று வலியால் அவதியுற்றதால் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபோது, அவர் கர்ப்பமாக உள்ளது தெரியவந்தது. இச்சம்பவத்தை அடுத்து, அந்த சிறுவன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, போலீசார் அவனை கைது செய்துள்ளனர்.
அவர்கள் பெற்றோர், காலை 8 மணிக்கு வேலைக்கு சென்று, இரவு 8 மணிக்கு வீடு திரும்புவதாக கூறப்படுகிறது. பெற்றோரின் இந்தக் கால இடைவெளியில் தான் இந்த குற்றம் நிகழ்ந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.