பிக் பாஸ் -3 சீசனில் கலந்து கொண்டு பிரபலமானவர்தான் தர்ஷன். இவர் 2022 ஆம் வருடம் வெளியான கூகுள் குட்டப்பா படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகம் ஆனார். இதில் அவருக்கு ஜோடியாக பிக் பாஸ் லாஸ்லியா நடித்திருந்தார். இந்த நிலையில் தர்ஷன் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தர்ஷன் குடியிருக்கும் வீட்டின் பக்கத்தில் காரை பார்க் செய்வது தொடர்பாக விவாகரத்தில் ஹைகோர்ட் நீதிபதியின் மகனுக்கும், தர்ஷனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதில் ஒரு பெண் மற்றும் நீதிபதியின் மகன் காயம் அடைந்த நிலையில் இருவரும் அண்ணா நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனை அடுத்து நடிகர் தர்ஷன் நண்பர்களோடு சேர்ந்து தாக்கியதாக நீதிபதியின் மகன் போலீசில் புகார் அளித்துள்ளார். அதே சமயம் நடிகர் தர்ஷன் தரப்பும் புகார் அளித்துள்ளது. இந்நிலையில் இரு தரப்பு புகார் குறித்தும் விசாரணை மேற்கொண்ட காவல்துறை மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நடிகர் தர்ஷன் மற்றும் அவரது நண்பன் லோகேஷ் ஆகியோரை கைது செய்துள்ளது.