
வருடந்தோறும் காரைக்காலில் மாங்கனி திருவிழாவானது வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்தவகையில் இந்தவருடம் மாங்கனித் திருவிழா வரும் 21 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இதனையொட்டி காரைக்கால் மாவட்டத்திற்கு வரும் 21ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து புதுச்சேரி முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.