
சென்னை மாவட்டத்தில் உள்ள ராயப்பேட்டை சைவ முத்தையா ஆறாவது தெருவில் துரைசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் மீன்பாடி வண்டி ஓட்டி வருகிறார். இவர் தனது மனைவியை பிரிந்து வாழ்கிறார். வழக்கமாக துரைசாமி விஜயகுமார் என்பவரது ஆட்டோவில் தூங்குவது வழக்கம். கடந்த 22-ஆம் தேதி துரைசாமி படுத்திருந்த ஆட்டோ தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனால் துரைசாமியின் தலை கால்களில் தீக்காயம் ஏற்பட்டது. அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்து துரைசாமியை மீட்டனர். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது முத்தையா தோட்டம் பகுதியைச் சேர்ந்த பாலாஜி என்பவர் ஆட்டோவுக்கு தீ வைத்து சென்றது தெரியவந்தது. துரைசாமிக்கும் பாலாஜிக்கும் இடையே முன் விரோதம் இருந்தது. இதனால் அவர் ஆட்டோவை கொளுத்தி விட்டு ஒன்றும் தெரியாதது போல அங்கிருந்து சென்றுள்ளார். இதனால் போலீசார் பாலாஜியை அதிரடியாக கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.