
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ராஜ் நகர் மாவட்டத்தில் 11 வயது சிறுமி ஒருவர் மர்ம நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இந்த சிறுமிக்கு காது கேட்காது மற்றும் வாய் பேச தெரியாது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அதாவது அரசு ஓய்வு இல்லத்திற்கு பிறகு சிறுமி குடிசையில் வசித்து வந்த நிலையில் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி திடீரென காணாமல் போனார். அதன் பிறகு காட்டுப் பகுதியில் இருந்து சிறுமி பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டார். அந்த சிறுமிக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்ட நிலையில் இரண்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. வென்டிலேட்டர் உதவியுடன் சிறுமிக்கு சிகிச்சை வழங்கிய போதிலும் முன்னேற்றம் இல்லாமல் கடந்த வெள்ளிக்கிழமை சிறுமி உயிரிழந்தார்