
பீகார் மாநிலத்தில் உள்ள போஜ்பூர் மாவட்டத்தில் ஆரா ரயில்வே நிலையம் அமைந்துள்ளது. இங்கு நேற்றிரவு 7.30 அளவில் நடந்த ஒரு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது நேற்று அமன்குமார் என்ற 20 வயது வாலிபர் ஒரு இளம் பெண் மற்றும் தன் தந்தையுடன் ரயில்வே ஸ்டேஷனுக்கு சென்றார். இதில் அந்தப் இளம் பெண்ணும் அவரின் தந்தையும் நடைமேடைகளுக்கு இடையே நடந்து சென்ற போது துப்பாக்கியால் அவர்களின் தலையில் சுட்டு அமன் குமார் கொலை செய்தார் . பின்னர் அவரும் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதைப் பார்த்து அங்கிருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்த நிலையில் உடனடியாக ரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மூவரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் உயிரிழந்த மூவரும் உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. உயிரிழந்த பெண்ணின் பெயர் ஜியா குமாரி (18), அந்த வாலிபரின் தந்தையின் பெயர் அணில் சின்கா (50). இந்த கொலை காதல் விவகாரம் தொடர்பாக நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதில் கொலை செய்யப்பட்ட இளம்பெண் டெல்லி செல்வதற்காக ரயில்வே நிலையம் வந்திருந்த நிலையில் வாலிபர் அவரை சுட்டு கொலை செய்துள்ளார். மேலும் இது தொடர்பான சிசிடிவி வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.