புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்த தனியார் நிதி நிறுவன ஊழியர் மணிகண்டன் (31) என்பவர் சென்னையைச் சேர்ந்த கீர்த்திகா (26) என்ற பெண்ணை காதலித்து வந்த நிலையில் இருவரும் கலந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு குழந்தை இல்லை.

இந்நிலையில் கீர்த்திகா சம்பவ நாளில் தன்னுடைய தாய் மாமாவான சதீஷ் என்பவருக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு நானும் என் கணவரும் உங்கள் வீட்டிற்கு வருகிறோம் என்று கூறியுள்ளார். அதன்படி இருவரும் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்திற்கு சென்ற நிலையில் மாமா வீட்டிற்கு செல்லாமல் ஒரு ஏரிக்கரைக்கு சென்று விட்டனர்.

பின்னர் அவர்கள் இருவரும் தங்கள் வைத்திருந்த விஷத்தை எடுத்து குடித்த நிலையில் கீர்த்திகா சதீஷ்க்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு நாங்கள் விஷம் குடித்துவிட்டதாக கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சதீஷ் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் கீர்த்திகா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் கூறிவிட்டனர்.

அதன் பிறகு மணிகண்டனுக்கு முதலுதவி கொடுக்கப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக அவரை வேறொரு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் செல்லும் வழியில் அவரும் உயிரிழந்தார். இதுகுறித்த தகவலின் பேரில் போலீசார் இருவரின் சடலங்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் குழந்தை இல்லாத ஏக்கத்தால் தம்பதி தற்கொலை செய்து கொண்டார்களா இல்லை வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.