
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பைவார் பகுதியில் விக்ரம் சம்பத் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விம்லா என்ற மகள் இருக்கும் நிலையில் அவர் பிஎட் முடித்துவிட்டு ஒரு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் சமீபத்தில் ஒரு வாலிபரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் அந்த காதல் திருமணத்தில் விம்லாவின் பெற்றோருக்கு உடன்பாடு இல்லை.
இதனால் அவர்கள் தொடர்ந்து கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இந்த விவகாரம் காவல் நிலையம் வரை சென்ற நிலையில் விம்லா தன் பெற்றோருடன் செல்ல மறுத்து காதல் கணவருடன் செல்ல விரும்புவதாக கூறினார். இதனால் விக்ரம் மிகுந்த மன வேதனை அடைந்து ஒரு அதிர்ச்சி செயலை செய்துள்ளார். அதாவது விளம்பரத்தில் தன்னுடைய மகள் இறந்து விட்டதாக கூறி செய்தி கொடுத்துள்ளார். மேலும் அவருக்கு இரங்கல் செய்தி தெரிவித்து அவர் செய்தித்தாளில் விளம்பரம் கொடுத்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.