
கரூர் மாவட்டம் புதுப்பட்டி பகுதியில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நிவேதிதா (25) என்ற மகள் இருந்துள்ளார். இவர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பு படித்தபோது அவருடன் படித்த போஸ் (30) என்பவரை காதலித்துள்ளார். இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
இவர்கள் இருவரும் ஒன்றாக வசித்து வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென வீட்டில் நிவேதிதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக அவருடைய தாய் சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். மேலும் அந்த புகாரின் படி காவல்துறையினர் சந்தேக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது