கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் பகுதியில் கடந்த 2019 ஆம் ஆண்டு காதலித்து ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட கனகராஜ்-வர்ஷினி பிரியா ஜோடியை ஆணவ படுகொலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலை வழக்கில் கொலை செய்யப்பட்ட கனகராஜின் சகோதரர் வினோத்குமார் தான் குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இது தொடர்பான வழக்கு இன்று கோவை எஸ்சி எஸ்டி சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இந்த கொலை வழக்கில் மொத்தம் 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் கந்தவேல், ஐயப்பன் மற்றும் சின்னப்ப ராஜா ஆகியோரை  விடுதலை செய்வதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது. அதன் பிறகு வினோத்குமாருக்கு மரண தண்டனை கூட வழங்கலாம் என்று நீதிமன்றம் கூறிய நிலையில் வருகிற 29ஆம் தேதி தீர்ப்பு வெளியாகும் என்று தெரிவித்துள்ளது. மேலும் கொலை குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனையான தூக்கு தண்டனை வழங்கப்படும் என்பதால் தண்டனை விபரத்தை பின் அறிவிப்பதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.