உத்திரபிரதேசம் மாநிலம் கான்பூர் தேஹத் ஷிவாலி  காவல் நிலையத்தில் ஒரு  சோகமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது மதன் ரத்தோர் என்ற இளைஞர் 16 வயது தலித் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதனை எடுத்து வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

இதனால் அந்த இளைஞர் மீது பெண்ணின் பெற்றோர் புகார் கொடுத்ததால் காவல்துறை கடத்தல் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனால் காவல்துறையினர் மதனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் . இந்நிலையில் சமீபத்தில் தான் மதன் சிறையில் இருந்து வெளியே வந்துள்ள நிலையில் இவர்களுடைய காதலை பெற்றோர் ஏற்காததால் இருவரும் வயலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.