காதலிக்க மறுத்த விதவைப் பெண்ணை அரிவாளால் சரமாரியாக வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளப்பட்டி பகுதியில் பிரியா என்ற கணவரை இழந்த இளம் பெண் வசித்து வருகிறார். இவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இவர் நான்கு ரோடு பகுதியில் இருக்கும் பிரபல பிரியாணி கடைகள் வேலை பார்த்து வந்தார். அந்த பிரியாணி கடைக்கு அடிக்கடி வந்து சென்ற கோகுல் என்பவர் பிரியாவை காதலித்துள்ளார். இந்த காதலுக்கு பிரியா மறுப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் கோபமடைந்த கோகுல் நான்கு ரோடு பகுதியில் பிரியா பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தபோது அவரது தலை மற்றும் கழுத்து பகுதியில் அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதனால் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய பிரியாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதற்கிடையே பொதுமக்கள் ஒன்று சேர்ந்து கோகுலை பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் கோகுலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.