திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் பகுதியில் மித்ரா என்ற 22 வயது இளம்பெண் வசித்து வந்துள்ளார். இவர் சட்டக்கல்லூரியில் படித்து வரும் நிலையில் ஒரு வாலிபரை காதலித்து வந்தார். இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்த நிலையில் பின்னர் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில் மித்ராவின் திருமண செலவுக்கு அவரது குடும்பத்தினரிடம் போதிய பணம் இல்லாததால் அவர்கள் தங்களுடைய பூர்வீக நிலத்தை விற்பனை செய்ய முடிவு செய்தனர்.

இது மித்ராவுக்கு மிகுந்த மன வேதனையை ஏற்படுத்திய நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மித்ராவின் சடலத்தை மீட்டு  பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.