கேரளாவில் உள்ள கொல்லம் பகுதியில் ஜீதின் என்ற 25 வயது வாலிபர் வசித்து வந்துள்ளார். இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு செல்போன் கடையில் வேலை பார்த்து வந்த நிலையில் இவருடைய தாத்தாவுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் கொல்லத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு துணையாக ஜீதின் இருந்து தன் தாத்தாவை கவனித்துக் கொண்டார். அப்போது அந்த மருத்துவ கல்லூரியில் மூன்றாம் ஆண்டு நர்சிங் படித்து வந்த மாணவி ஒருவருடன் ஜீதினுக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த மாணவியின் சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம்.

இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதைத்தொடர்ந்து வாலிபர் தன் காதலியின் வீட்டிற்கு சென்று அவரது பெற்றோரிடம் பெண் கேட்ட நிலையில் அவர்கள் பெண் கொடுக்க மறுப்பு தெரிவித்தனர். இதனால் வாலிபர் மன வேதனையில் இருந்த நிலையில் திடீரென அவருடைய காதலிக்கு பெற்றோர் பெண் பார்த்து வேறொரு வாலிபருடன் நிச்சயதார்த்தத்தை நடத்தி வைத்தனர்.

இந்த தகவலை கேள்விப்பட்ட வாலிபர் அவசரமாக கன்னியாகுமரி மாவட்டம் புத்தன்சந்தை பகுதிக்கு தன் காதலியை பார்க்க வந்தார். ஆனால் வாலிபால் அவரது காதலியையும் காதலியின் குடும்பத்தினரையும் பார்க்க முடியவில்லை. இதனால் துடிதுடித்து போன வாலிபர் தன் காதலையின் வீட்டின் முன்பாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அதாவது ஒரு மரத்தில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் இதை பார்த்து அங்கிருந்தவர்கள் உடனடியாக மார்த்தாண்டம் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்த வாலிபரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தன் காதலன் தற்கொலை செய்து கொண்டதை கேள்விப்பட்ட அந்த பெண்ணும் வீட்டில் இருந்த கிருமி நாசினியை எடுத்து குடித்துவிட்டார்.

உடனடியாக குடும்பத்தினர் அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.