சேலம் அஸ்தம்பட்டி பகுதியை சேர்ந்த 20 வயதான வாலிபர் ஒருவர் தனியார் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் மூன்றாம் ஆண்டு படித்து வரும் நிலையில் இவரும் சின்ன திருப்பதியில் வசித்து வரும் இளம் பெண் ஒருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். அந்தப் பெண்ணும் சேலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர்களின் காதல் விவகாரம் இரு வீட்டாரின் பெற்றோருக்கும் தெரிய வந்ததால் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து காதல் ஜோடியினர் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து நேற்று முன்தினம் இருவரும் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

பிறகு அரியானூரில் உள்ள ஒரு கோவிலில் வைத்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதனை தொடர்ந்து கல்லூரிக்கு சென்ற மகளை காணவில்லை என்று பெற்றோர்கள் கன்னங்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து மாயமான கல்லூரி மாணவியை போலீசார் தேடி வந்த நிலையில் காதல் திருமணம் செய்த ஜோடியை நேற்று அஸ்தம்பட்டி போலீசார் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். பிறகு கன்னங்குறிச்சி காவல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் அங்கே இரு வீட்டாரின் பெற்றோரையும் போலீசார் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பெற்றோருடன் செல்ல கல்லூரி மாணவி மறுப்பு தெரிவித்ததால் அவரை அங்குள்ள காப்பகத்தில் போலீசார் இருக்குமாறு தெரிவித்தனர். மறுபக்கம் மாணவியை திருமணம் செய்த கல்லூரி மாணவருக்கு சிலர் கொலை மிரட்டல் விடுத்தனர். இதனை தொடர்ந்து போலீஸ் சார் கல்லூரி மாணவருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர்கள் குறித்து விசாரித்து வருகிறார்கள். அதே சமயம் காதல் திருமணம் செய்த அந்த பெண்ணுக்கும் உரிய பாதுகாப்பு அளிக்குமாறு கேட்டுக் கொண்டனர். இதனை தொடர்ந்து காதல் திருமணம் செய்த கல்லூரி மாணவன் மற்றும் மாணவியின் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.