
ஆந்திர மாநிலத்தில் உள்ள சித்தூர் மாவட்டத்தில் ரேணுகா நகர் என்ற பகுதி உள்ளது. இங்கு சீனிவாசலு என்ற 31 வயது நபர் வசித்து வருகிறார். இவர் ஒரு தங்கும் விடுதி வைத்துள்ள நிலையில் இன்னும் திருமணம் ஆகவில்லை. இவருக்கு சோனியா பானு என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இவர் கணவரை இழந்த விதவைப் பெண். இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துக் கொண்ட நிலையில் திடீரென இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு காதலில் விரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக சீனிவாசலு அவரை திருமணம் செய்து கொள்ள மறுத்தார்.
இவர் கடந்த 3 மாதங்களாக சோனியாவிடம் பேசுவதை தவிர்த்ததால் தன்னை திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவித்து விடுவாரோ என்ற பயத்தில் தன் காதலனை கடத்தி சென்று திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். இதற்காக ஒரு கூலிப்படையை இலட்சக்கணக்கில் பேரம் பேசி கடத்தலுக்கு செட் செய்தார். அதன்படி நேற்று சோனியாவுடன் சீனிவாசலு விடுதிக்கு சந்தீப், ரியாஸ், ராஜேஷ், மோகித், பாபா பக்ருதீன் ஆகியோர் சென்றனர். இவர்கள் காரில் சென்று இறங்கிய நிலையில் அங்கிருந்த சீனிவாசலுவை காரில் கடத்திய நிலையில் ஊழியர்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்து நிலையில் காரின் நம்பரை வைத்து உடனடியாக ஷேஸ் செய்து அவரை பிடித்தனர். மேலும் இதைத் தொடர்ந்து சோனியா பானு மற்றும் கூலிப்படையை காவல்துறையினர் கைது செய்தனர்.